கிளிநொச்சி- அழகாபுரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம்,அழகாபுரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் சுமார் 300 குடும்பத்துக்கு மேல் வசித்து வருநிலையில் பல வருட காலமாக இவ்விதி கிராவல் வீதியாகவும், குண்டும் குழியுமாக காணப்படுவதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் முதியவர்கள் தமது நாளாந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த கிராமத்தில் வாழும் மக்கள் பெரிதும் சுவாச நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோரிக்கை
அத்தோடு, அளவிலான கிரவல்கள் அகலப்பட்டு வேறு பகுதிகளுக்கு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் இருந்து அகலப்பட்டு வருவதன் காரணமாக இந்த வீதி பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களும் முற்று முழுதாக அழிவடைந்து வருகின்றது.
மேலும், இந்த வீதியினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக புனரமைத்து தருமாறு மக்கள் மிக பணிவுடன் வேண்டுகின்றனர்.
அத்துடன், எமது பகுதியில் தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகள் சுயேச்சை குழுக்கள் எமது காலடியில் வந்து உங்கள் தேவைகள் என்ன எங்களால் நிறைவேற்றித் தர முடியும் நாங்கள் உடனடியாக அதை நிறைவேற்றுவோம் என பல்வேறு வகையில் உமக்கு வாக்குறுதிகளை வழங்கிச் செல்கின்றார்கள் .
பின்னர் அடுத்த தேர்தல் வரும்பொழுதுதான் அவர்களை காண முடிகின்றது என தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படத்த பாத்துட்டு, என்னயா ம*ரு படம் எடுத்து வெச்சிருக்க-னு கேட்டாரு" - RK Selvamani Open talk Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
