சிறப்பானதொரு அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்: வீ.இராதாகிருஷ்ணன்
இந்த அரசு வீழ்வது நிச்சயம், அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் (V. Rathakrishna) தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பாதீடு ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் நேற்று (07) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளம் இன்னும் முறையாக, முழுமையாகக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri