நாட்டை மீட்டெடுக்க களத்தில் குதித்த மக்கள் - பதுளையில் 826 பேர் கொண்ட குழு
இலங்கையின் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பல மாவட்டங்கள் நிர்மூலமாகி உள்ளன.
இதில் பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிரித்துள்ளன.
இந்நிலையில் பதுளை மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையில் இருந்து குழுவொன்று வருகை தந்துள்ளது.
பதுளையை மீட்கும் நடவடிக்கை
சுமார் 826 பொது மக்கள் ஒன்றுகூடிய பதுளையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களும் உபகரணங்களும் மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியாளர்கள் குழுவுடன் பேக்கோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஏற்கனவே சிவனொலிபாதமலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அரச ஊழியர் குழுவொன்று ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri