திருப்புமுனைகளை ஏற்படுத்தவுள்ள பொது தேர்தல்: சிவசக்தி ஆனந்தன் ஆரூடம்
நடைபெறவுள்ள பொது தேர்தல் திருப்புமுனைகளை ஏற்படுத்துவதாகவே அமையும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதற்கு பலமான ஆணையை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போரின் பின்னரான சூழல்
“போரின் பின்னரான சூழலில் தமிழ் மக்கள் ஒற்றுமையை மையப்படுத்தியே தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.
அந்த வகையில் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
இந்தக் கூட்டணியில் குறைகள் நிறைகள் இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் விருப்புக்கு அமைவாகவும், அவர்களின் அபிலாஷைகளைப் அடைந்து கொள்வதற்காகவும் இணைந்து செயற்படும் முக்கியமானதொரு அரசியல் சக்தியாக இருக்கின்றமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயமாகும்.
எதிர்மறையான விமர்சனம்
எமது கூட்டினை பலவீனப்படுத்துவதற்கு அண்மைய நாட்களில் எதிர்மறையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், தமிழ் மக்கள் யதார்த்தத்தினை நன்கு அறிவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
அந்த வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
