கொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்த திருடனை அடித்துக் கொன்ற மக்கள்
கொழும்பில் வீடொன்றில் கொள்ளையடிக்க வந்த நபர் பிரதேச மக்களின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
முல்லேரியா, மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி சொத்துக்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்க மூன்று பேர் அடங்கிய கொள்ளை குப்பல் ஒன்று முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் உள்ளவர்கள் கத்தி கூச்சலிட்டமையினால் அயலவர்கள் வருகைதந்துள்ளனர். இதனால் மூவரில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். ஒருவர் அயலவர்களிடம் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையரை சுற்றிவளைத்த பிரதேச மக்கள் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.