மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்

Batticaloa Sri Lanka Politician Eastern Province
By Bavan Aug 31, 2026 05:43 AM GMT
Report

மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம் எனும் பெயர் சூட்டப்பட்டு உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மீனவர் கிராமத்தில் ஒரு சிலர் குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி 

இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மலசலகூடம், குடிநீர், மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் கடற்றொழிலாளியுமான அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்.

நான் பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம் முடித்து நான் இருப்பதற்கு சொந்தமாக காணி, வீடு, மலசலகூடம் இல்லை.

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் | People Batticaloa Have Been Suffering For 20 Years

பரல் வைத்து கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம். அத்துடன் எனது பிள்ளைகள் மனைவி தொழு நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து அனுமதிதர மறுத்து வருகின்றனர்.

இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய பணக்காரர்களுக்கு வழங்குகின்றன.

நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல் வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச் காணி தருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் கூறுகையில், நான் அடிப்படை வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து வருகின்றேன்.

இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம், கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்

தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள் எங்களுக்கு வாக்கு போடுங்க அதை செய்கின்றோம். இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல் வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை.

எனவே எங்களின் அடிப்படை உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் | People Batticaloa Have Been Suffering For 20 Years

எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது. அதை பணம் படைத்தவர்கள் பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.

கேட்டால் அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர். எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில் இருந்து யாரும் எழும்ப போவதில்லை என்றார்.

கடற்றொழிலாளியான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில், இந்த கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன்.

இந்த நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.

நாங்கள் இந்த ஓலை குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.  குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது.

நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன். இன்று எனது வாழ்கையை பாருங்கள் கியுபார் பணமும் இல்லாது தத்தளிக்கிறேன். 

எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.

எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல்

கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில், ஓலைக்குடிசையில் கடந்த 12 வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றோம்.

நான் வீட்டு வேலைக்கு சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம் குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் | People Batticaloa Have Been Suffering For 20 Years

இதுவரை எங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஆவணம் கூட இதுவரை தரவில்லை.

உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும் என்றார்.

இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும் இந்த மீனவர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளது

எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர். மலசல கூடம், மின்சாரம் போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடப்பாடு ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் | People Batticaloa Have Been Suffering For 20 Years

மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் | People Batticaloa Have Been Suffering For 20 Years

கடலில் மூழ்கிய பெண், இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு - சிறுவனை தொடர்ந்து தேடும் பொலிஸார்

கடலில் மூழ்கிய பெண், இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு - சிறுவனை தொடர்ந்து தேடும் பொலிஸார்

பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்

பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US