நிலைப்பாட்டை வெளியிட மக்கள் காத்திருக்கின்றனர்-ஐ.மக்கள் சக்தி
அரசாங்கத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளியிட மக்கள் பொறுமையின்றி காத்துக்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் உரிமை உறுதியாகியுள்ளது
தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் மக்களின் அந்த உரிமை உறுதியாகியது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவதும் உறுதியாகியது. இதற்கான சந்தர்ப்பம் இல்லாததன் காரணமாக மக்கள் போராட்டம் நடத்தினர்.
தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்திட்டங்களை உருவாக்க ஐந்து, ஆறு மாதங்களாகும் என நினைத்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தனர்.
எனினும் தேவையான சட்டத்திட்டங்களுக்கான திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அது தோல்வியடைந்தது. தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், ஐந்து நாட்களுக்குள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் வேட்பாளர்களை அழைத்து தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்து அதனை ஒழுங்குப்படுத்தி வர்த்தமானியில் வெளியிட முடியும்.
இதற்கான சட்டத்திட்டங்களை உருவாக்கும் தேவை தேர்தல் ஆணையாளருக்கு இருக்காது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
