மக்கள் பிரச்சினைகள் என்ற குவியலுக்குள் சிக்கியுள்ளனர்:ஆளும் கட்சியின் உறுப்பினர்
மக்கள் தற்போது பிரச்சினகள் என்ற குவியலுக்குள் சிக்கியுள்ளதாகவும் உடனடியாக அரசாங்கம் அதில் தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும் என ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மக்கள் அத்தியவசிய பொருட்களான எரிவாயு, எரிபொருள் மற்றும் பால் மாவை பெற்றுக்கொள்ளுவதற்காக வரிசைகளில் நிற்கின்றனர். இந்த அத்தியவசிய பொருட்களை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் கூட அரசாங்கத்தை விமர்சித்த போது, பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை பாதுகாத்தனர்.
இதன் காரணமாக பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு வகையில் மக்களின் அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாது போனால், அது பற்றியும் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது அரசாங்கத்திற்கு தூதிப்பாடுவதற்காக மாத்திரமல்ல. அத்துடன் செய்ய முடியாதவை குறித்த விளக்கம் கூற வேண்டியது அவசியமற்றது எனவும் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.



