நீர் விநியோகம் வழங்கப்படாமையினால் மக்கள் சிரமம்
திருகோணமலை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் நீர் விநியோகம் வழங்கப்படாமையினால் மக்கள் சிரமப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
குழாய் நீரை நம்பி திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் இன்று சித்திரை புத்தாண்டு தினத்தில் கூட தங்களுக்கு நீர் வழங்கப்படவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரிடம் கேட்டபோது தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை 96ம் கட்டை பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பிரதான நீர் குழாய் உடைந்துள்ளதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நீர் வழங்கல் அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனால் திருகோணமலை நகரம், நிலாவெளி, கிண்ணியா,
தம்பலகாமம் பகுதிகளில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நீர் வினியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri