கடனாளிகளாக மாறியுள்ள நாட்டு மக்கள்: ரஞ்சித் ஆண்டகை
நாட்டு மக்கள் நீண்ட கால கடனாளிகளாக மாறியுள்ளனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இறையாண்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு இருபது ஆண்டுகள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை எவ்வாறான நற்செய்தியாக கருதப்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்
அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம், நாட்டு மக்களுக்கு நற்செய்தி என்ற வகையில் பிரசாரம் செய்திருந்தது.
இந்த பிரசாரத்தை விமர்சனம் செய்யும் வகையில் கர்தினால் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அரசியல் தலைவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டு சொத்துக்களை விற்பனை செய்வதாகவும் இதனால் நாட்டின் இறையாண்மை இல்லாமல் போவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
|   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam