இலங்கையில் எம்.பிக்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் மக்கள்!
"மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள்." என எதிரணி எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
“நாட்டின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றது என்று அரச தரப்பு கூறி வருகின்ற போதிலும் நடைமுறையில் அப்படி எதையும் காணக்கூடியதாக இல்லை.
மக்கள் உணவுக்காக அலைவதை அறியக்கூடியதாக இருக்கின்றது. மக்கள் இப்போது அவர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய எம்.பிக்களிடமே உணவு, பணம் ஆகியவற்றைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை
மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள்.
எம்.பிக்களிடமே உதவி கேட்கும் அளவுக்கு மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல, மக்கள் சில எம்.பிக்களின் வீடுகளுக்குச் சென்றும் உணவு
கேட்கின்றார்கள். கதவோரம் காத்துக்கிடக்கின்றார்கள்" என்றும் எதிரணி
எம்.பிக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam