நாட்டு மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது
நாட்டு மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மட்டுமன்றின் பொதுமக்களின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என அவர் சு்டடிக்காட்டியுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளரது அகோரமான கொலைச் சம்பவம் அனைவரையும் மோசமாக பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பான அமைச்சர் நாளைய தினம் நாடாளுமன்றில் விளக்கமளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
திட்டவட்டாக பட்டப் பகலில் ஓர் உள்ளுராட்சி மன்றத் தவிசாளரை சுட்டுக் கொலை செய்வது ஒர் சாதாரணமான விடயமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபை ஆட்சி நிறுவப்படும் சந்தர்ப்பத்தில் உயிரிழந்த தவிசாளருக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த இருவர் கடத்தப்பட்டிருந்தனர் இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரிழந்தவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாகவும் இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையாளியை மிக அவசரமாக கைது செய்ய வேண்டுமென ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.



