பொலிஸாருக்கு எதிரான மக்கள் மனநிலை! அமைச்சரின் வலியுறுத்தல்
பொலிஸார் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மகியங்கணை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸார் நித்திரை கொள்கின்றனரா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காவு கொள்ளப்படும் உயிர்கள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் மூலம் மனித உயிர்கள் காவு கொள்ளப்படுபவதுடன் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் கடமை.
நீதியை நிலைநாட்டுவதற்கு காலம் தாழ்த்தப்படக் கூடாது. அவ்வாறு உரிய நேரத்தில் நீதி நிலைநாட்டப்படாவிட்டால் பெரும் சோகங்கள் நிகழக்கூடும்.
பொலிஸார் கடமைகளை சரியாகச் செய்யத் தவறினால் சமூகத்தில் கடுமையான விமர்சனங்கள் எழக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
