மழை நீர் குடிமனைகளுக்குள் தேங்குவதற்கு மக்களும் முக்கிய காரணம்! அனுசியா குற்றச்சாட்டு
நீர் வடிகால், பாலங்கள் மதகுகள் பொருத்தமான இடங்களில் இல்லாது பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் அமைக்கப்படுவதனாலும் மழை காலத்தில் மழை நீர் வழிந்தோடுவதற்காக வீதிகளை வெட்டிச் சேதமாக்கும் நிலை உருவாகி வருகின்றது என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இத்தகைய தேவையற்ற நிதி இழப்பையும் சேதமாக்கும் நடவடிக்கைகளையும் தவிர்க்கும் வகையில் வீதிகளையும் கடடங்களையும் அமைக்க துறைசார் தரபினர் முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான காலனிலையை அடுத்து குடியிருப்புக்களுக்குள் கணிசமான மழை நீர் தேங்கி மக்களின் நாளாந்த நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கின்றதையும் இதனால் வீதிகள் பல குறுக்காக வெட்டப்படுவதையும் பல இடங்களில் அவதானிக்க முடிகின்றது குறித்து கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
துர்ப்பாக்கிய நிலை
அவர் மேலும் கூறுகையில், மழை பெய்தால் வெள்ளம் வருவது இயலுதான். ஆனால் அது வடிந்தோடிச் செல்வதற்கான பொறிமுறை இல்லமையே இந்த நிலை ஏற்படக் காரணம்.
அதேநேரம் எமது தீவக பகுதியில் இது கடந்த 10 முதல் 12 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக அதிகளவான பாதிப்பை காட்டுகின்றது.

பிரதான வீதிகள் அமைக்கப்படும் போது அவற்றின் உயரங்களும் குறைந்தது இரு அடிகளுக்கு மேல் இருந்ததை விட உயருகின்றது. அதேபோலத்தான் உள்ளக வீதிகளும் உயர்த்தப்படுகின்றன.
மக்களும் பொது அமைபுகளும் தமது பகுதிகளின் வீதிகளை அமைத்து தாருங்கள் என பிரதேச சபைகளிடமும் மத்திய அரசிடமும் வருடாவருடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
அதனடிப்படையில் அதிகளவான வீதிகள் குறிப்பாக பிரதான மற்றும் உள்ளக வீதிகள் போடப்படுகின்றன. ஆனால் அவற்றை மேற்கொள்ளும்போது நில அமைவுகள் மற்றும் நீர் வழிந்தோடும் பொறிமுறைகள் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
திட்டமிடல்
ஒவ்வொரு கட்டுமாணத்தின் போதும் நீர் வடிகாலமைப்பு முதன்மைப்படுவது அவசியம். குறிப்பாக வீதி கட்டுமாணம் மற்றும் அவிருத்தியின் போது இது மிக முக்கியமாக அவதானத்தில் கொள்ளப்படுவது அவசியம்.
ஆனால் அது கண்டுகொள்ளப்படாது, ஆரம்பகாலத்தில் மக்கள் செறிவு குறைந்ததும் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் குறைவாகவும் இருந்த காலத்தின் அமைவுகளுக்கேற்பவே பல வீதிகள் போடப்படுகின்றன.

அதுமட்டுமில்லாது மக்களும் தமது கட்டுமாணங்களை உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாதும் நீர் வழிந்தோடும் வழிகளை கண்டுகொள்ளாது அமைப்பதும் மழை நீர் வழிந்தோட முடியாத நிலையை உருவாக்குகின்றன.
இவ்வாறான நிலையால் மழை காலங்களில் வருடா வருடம் மக்கள் வீதிகளை குறுக்காக வெட்டி நீரை வழிந்தோடச் செய்வதும், அதனால் வீதிகள் சேதமாகுவதும், அதன்பின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அது மேலதிக சுமையாகவும் இருக்கின்றன.
எனவே இனிவருங் காலத்தில் இந்த துர்ப்பாக்கிய நிலை உருவாகாத வகையில் மக்களும் துறைசார் அதிகாதிகளும் பொறிமுறைகளுடாக நல் திட்டமிடலுடன் இவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam