எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்(Photos)

Sri Lanka Police Mannar Sri Lanka Sri Lanka Bus Strike Sri Lanka Fuel Crisis
By Ashik Jul 05, 2022 03:11 PM GMT
Report

மன்னாரில் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளால் தனித்தனியாக எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வீதியை மறித்து இன்று(5) காலை மேற்கொண்ட போராட்டத்தினால் போக்குவரத்தை மேற்கொள்ள காத்திருந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கோரிக்கை

மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட 13200 லீற்றர் டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்(Photos) | People Affected By The Struggle For Fuel

எனினும் வழங்கப்பட்ட 13200 லீற்றர் டீசலில் தற்போது வரை 2413 லீற்றர் டீசல் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து டீசல் எவையும் தனியார் பேருந்துகளுக்கு வழங்கவில்லை. தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு, அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமக்கான எரிபொருளையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்(Photos) | People Affected By The Struggle For Fuel

இதனால் போக்குவரத்து சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்(Photos) | People Affected By The Struggle For Fuel

இந்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்,இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள், கலந்து கொண்டிருந்துள்ளனர்.

இணக்கம்

இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் எண்ணைக் குதங்களில் இருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவது என்ற அரச நிலைப்பாட்டிற்கு அமைய மன்னார் சாலைக்கு 6600 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லீற்றர் டீசலையும்,13,200 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் 5000 லிட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என  கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்(Photos) | People Affected By The Struggle For Fuel

இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இதேவேளை மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் தமக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்(Photos) | People Affected By The Struggle For Fuel

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US