போதைப் பொருளுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு
இலங்கையின் இளைஞர்,யுவதிகள் உட்பட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு வருடங்களில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த பழகிக்கொண்டுள்ளதாக நீதி,சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டக்கூடும்
தொண்டு சேவையில் ஈடுபட்டு வரும் 160 பேர், சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த நிகழ்வு நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,
அடுத்த இரண்டு வருடங்களில் இந்த எண்ணிக்கையானது 10 லட்சத்தை தாண்டக்கூடும். நாடு முழுவதும் பரவியிருக்கும் போதைப் பொருளை சட்ட நடவடிக்கைகளால் மாத்திரம் தடுக்க முடியாது. போதைப் பொருட்களின் பயங்கர தன்மை குறித்து மக்களுக்கு விளக்கும் வேலைத்திட்டங்களை நாடு முழுவதும் நடத்த வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை
அதேவேளை சமாதான நீதவான் பதவி மிகவும் கௌரவமான பதவி, போதைப் பொருள் அனர்தத்தில் இருந்து நாட்டின் இளைஞர்,யுவதிகள் உட்பட மக்களை காப்பாற்ற, இவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விஷ போதைப் பொருட்களான ஹெரோயின், ஐஸ் போன்றவை நகர புறங்களில் மாத்திரமல்லாது கிராம புறங்களிலும் பரவியுள்ளது. மேலும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
you may like this video





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
