ஓய்வூதியத் திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு
ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன.
இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 நாட்களாக நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிக அண்மையில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மற்றும் விரைவில் ஓய்வுபெற உள்ள அதிகாரிகளின் தகவல்களை புதுப்பிக்கும் கணினி கட்டமைப்பே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுகளினால பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கோளாறு காரணமாக ஓய்வூதியம் வழங்கும் பணிகளில் எந்தவித தடையும் ஏற்படாது எனவும், இன்று திட்டமிட்டபடி ஓய்வூதியங்களை வழங்க முடியும் எனவும் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜயநாத் தெரிவித்தார்.
தற்போது சுமார் 7 இலட்சத்து 90 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.