வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
மனுசவி கடன் திட்டம், ஓய்வூதியத் திட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதன்முறையாக மானியம் வழங்கள் போன்ற செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.
“இலங்கையையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும் சேவை அல்ல எனவும், பொருளாதார ரீதியில் நாட்டை உயர்த்தும் தீர்வாக குறித்த திட்டம் அறியப்படுகிறது எனவும், அனுராதபுர சல்காது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் நடமாடும் சேவை நிகழ்வுத்தட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (31) அனுராதபுர சல்காது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நடமாடும் சேவை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும் சேவை அல்ல, மாறாக நாட்டை பொருளாதார ரீதியில் உயர்த்தும் தீர்வாக அறியப்படுகிறது.
இது போன்ற இரண்டு நிகழ்வுகளை காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடத்த உள்ளோம் . இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக்கூடிய தலைமைக்காக நான் இன்று நிற்கின்றேன்.
வெளிநாடு வாழ் தொழிலார்கள் சட்டரீதியாக பணத்தை வங்கி மூலம் நாட்டுக்கு கொண்டு வரும் முறையை முதலில் உருவாக்கியதால் நாம் இன்று பொருளாதார காற்றை சுவாசிக்கிறோம்
"ஹோப் கேட்: பெயரில் விமான நிலையத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக தனி கதவை திறந்தோம். நாட்டிற்கு டொலர்களை அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கியுள்ளோம்.
மனுசவி கடன் திட்டம்
"மனுசவி" கடன் திட்டம் . ஓய்வூதியத் திட்டம் மற்றும் முதன்முறையாக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மானியம் வழங்கள் போன்றன சொயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொழில்முனைவோரை மேம்படுத்தும் ஆண்டாக பெயரிடப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களை தொழில்முனைவோராக உயர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டதுள்ளது . மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க 22 மில்லியனை வழங்கியுள்ளோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |