நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் உசச் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின் 121(1) ஆம் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குள்ளாக்கப்பட்ட “நாடாளுமன்ற ஓய்வூதிய (நீக்கம்)” என்ற சட்ட மூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன நாடாளுமன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

குறித்த சட்ட மூலத்தில் உள்ள எந்த விதிமுறையும் அரசியலமைப்பின் எந்த பிரிவுக்கும் முரணாக இல்லை என அறிவித்துள்ளார்.
அதனால் அந்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் இந்த சட்ட மூலத்தை சட்டமாக்குவதற்கு அரசியலமைப்புச் சிக்கல் இல்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam