யாழில் கரப்பான் பூச்சி வடையால் மூடப்பட்டிருந்த உணவகம் இன்று திறக்கப்பட்டது
கடந்த மாதம் 04.12.2022ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் இனங்காணப்பட்டன.

வழக்கு நடவடிக்கைகள்
இதனையடுத்து தனித்தனியாக உணவகத்திற்கும், சமையற் கூடத்திற்கும் எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 06.12.2022 ஆம் திகதி அன்று பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து உணவகத்தினையும் சமையற்கூடத்தினையும் வழக்கு நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

தண்டப்பணம்
இதனையடுத்து உணவகமும், சமையற்கூடமும் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்நிலையில் இன்றையதினம் (16.01.2023) நீதிமன்றில் வழக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000 ரூபா தண்டமும், சமையற்கூடத்திற்கு 20,000 தண்டமும் விதிக்கப்பட்டதுடன், கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் வழங்கியது.
இதையடுத்து சுமார் 40 நாட்களாக சீல் வைத்து
மூடப்பட்டிருந்த குறித்த உணவகமும், சமையற்கூடமும் நீதிமன்றின்
கட்டளையினையடுத்து இன்று திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam