பருத்தித்துறை நகர் பகுதியில் 12 உணவகங்களுக்கு தண்டம்
யாழ். பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர் தலைமையில் நகர் பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது, சுகாதாரச் சீர்கேடுகளுடனும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வகையிலும் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு எதிராகப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தண்டப்பணம்
குறித்த வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உரிமையாளர்கள் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, அவர்களை எச்சரித்த மன்று, அவர்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri