கொழும்பு தொடர்மாடியில் போதை மாப்பியாக்கள் : வெளியாகும் அதிர்ச்சித் தகவல்
பேலியகொடை மோதர உயன தொடர்மாடி குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை மிக சூட்சுமமாக நடைபெற்று வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை புதிய பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் மிக நீண்ட காலமாக நடைபெற்றுள்ளதோடு அதனை அண்டிய பகுதிகளில் ஒத்துப் பார்ப்போரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விற்பனை நேரங்கள்
போதைப்பொருள் வியாபாரம் நடைபெறும் நேரத்தில் வெளியார் உள்ளே செல்ல முடியாது. இந்த தொடர்மாடியில் முதலாம் மாடியில் தான் போதைப்பொருள் விற்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேல் மாடியில் காணப்படும் திறந்த வெளியில் இருந்து கீழே வீசப்படும் போது கீழ் இருந்து மேல் மாடிக்கு பணம் வீசப்பட்டே பரிமாற்றம் நடந்துள்ளது.காலை 6 மணிக்கும் மற்றும் நண்பகல் 12 மணிக்கு பின்னேரம் 5 மணி தொடக்கம் 9-10 மணி வரை வியாபாரம் நடைபெறும்.
அந்த நேரத்தில் தொடர்மாடி குடியிருப்புக்கு யாரும் செல்ல முடியாது. அவர்கள் பாதாள குழுவினர் போல் செயற்படுகின்றனர். விற்பனை நடைபெறும் போது லிப்டில், மாடிப் படிகளில் சிறுவர்கள் செல்வதை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.அவர்களில் விற்பனையை பாரிய அளவில் செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பறிக்கப்படும் தொலைபேசிகள்
போதை பொருள் வாங்கும் போது தொலைபேசி கொண்டு செல்ல முடியாது.அப்படி கொண்டு சென்றால் அடித்து அவற்றை வாங்கிக் கொள்கின்றனர். இங்கு ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் அனைத்தும் கிடைக்கப் பெற்றுள்ளன.

போதை வாங்குபவர்கள் ஒன்று கூடிய பின்னர் அவர்களின் பணம் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மேல் வீசப்பட்ட பின்னர்.போதை பொருள் மேலிருந்து கீழ் வீசப்படுகிறது. பொலிஸார் கண்டுபிடிக்காத நிலையில் நீண்ட காலமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |