ரணில் அரசாங்கத்தின் புதிய முயற்சி! பீரிஸ் வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,''இன்னமும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பதற்கே இந்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது.
ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்தால், 2025, ஆகஸ்ட் வரை பொதுத் தேர்தலை நடத்த வேண்டியதில்லை.
அப்படியானால், இன்னமும் இரண்டு வருடங்களுக்கு இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கலாம். 2024, செப்டம்பர், அக்டோபரில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலையே இல்லாது செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
