பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்! பிரான்ஸ் அரசின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலின் "பெகாஸஸ்" உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பெகாஸஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி, பிரான்ஸில் செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், எதிா்க்கட்சியினா் ஆகியோரது மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்போது அதிபர் இம்மானுவேல் மெக்ரான் செல்போனும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் மத்திய அரசு தாங்கள் அதுபோல உளவு பார்க்கவில்லை என விளக்கம் அளித்துள்ளதுடன்,விசாரணைக்கும் உத்தரவிடவில்லை என கூறப்படுகின்றது.
அதேநேரம், பிரான்சில் தனிநபா் ரகசியத் தகவல்கள் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதா, தகவல்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டனவா, சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்றதா என விசாரணை நடைபெறும் என்று பிரான்ஸ் அரசின் நீதி அமலாக்கத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் அந்த நாடுகளின் அரசுக்கு எதிரான 1000த்திற்கும் மேற்பட்டவா்களின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.
2019ல் நடைபெற்ற இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த சாப்ட்வேர், அரசு கேட்டால் மட்டும் தான் வழங்கப்படுமே தவிர தனி நபர்களுக்கு தரப்படாது என்பதால், அரசு மீது குற்றச்சாட்டு எழுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.