தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையில் வியாபார நடவடிக்கை மேற்கொண்டோருக்கு எதிராக வழக்கு
திருகோணமலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப் பத்திரம் இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அனுமதிப் பத்திரமின்றி நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டவர்கள் எனப் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட பலரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அனுமதிப் பத்திரம் இன்றி வியாபார நடடவிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த பொதுமக்களுக்கு திருகோணமலை பதில் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், வியாபாரிகளையும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
