நல்லூர் பிரதேச சபை மஞ்சள் கடவையில் கற்குவியல்: செயலாளர் மீது பொலிஸ் முறைப்பாடு
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் மஞ்சள் கடவையில் காணப்பட்ட கற்குவியால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நல்லூர் பிரதேச சபை செயலாளர் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள உப அலுவலகத்துக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டுக் கடவையில் நீண்ட நாட்களாக குறித்த கற்குவியல் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொலிஸ் முறைப்பாடு
இந்நிலையில், இரவு வேளை குறித்த வீதியால் பயணித்த ஒருவர் மஞ்சள் கோட்டு கடவையில் காணப்பட்ட கற்குவியலில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நல்லூர் பிரதேச சபை செயலாளர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
