தேர்தல் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடவும்:டலஸ் அழகப்பெரும
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவது நிச்சயம் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியாக தெளிவாகும் சஜித் பிரேமதாசவின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறும் தோல்வியடைந்தவர்களை கௌரவமாக நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் மிக அதிகமாக அவமரியாதை செய்யப்பட்ட இழிவுபடுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அடையாளப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மீது சேறு பூசல்கள்
ஏனைய தரப்பினர் தங்களது ஆயுதமாக சஜித் பிரேமதாச மீது சேறு பூசல்களை மேற்கொண்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாகரீகமான முறையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு இழிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தவர்கள் வன்முறையையோ அல்லது நீதியற்ற இழிவுபடுத்தல்களையோ பதிலுக்கு செய்யக்கூடாது என அவர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
