சுதந்திரத்தையும், விடுதலையையும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்திவிடக்கூடாது - சாலிய பீரிஸ்
கொழும்பு - மருதானையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை சந்திக்க சட்டத்த்தரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இது தொடர்பில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு சட்டத்தரணிகளின் சேவையை பெற்றுக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி மறுப்பு
சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதுடன், 2018ம் ஆண்டு 5ம் இலக்க பலவந்த கடத்தல் சட்டத்திற்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தையும், விடுதலையையும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்திவிடக் கூடாது எனவும் அது பொது மக்களுக்கும் கிடைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிய 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
