ராஜஸ்தான் ரோயல்ஸின் அதிரடி துடுப்பாட்டம்! முதலாவது தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி
ஐபிஎல் தொடரில் இன்று(28) நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணி
அதன்படி, பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கம் முதல் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.

பிரியன்ஷ் ஆர்யா 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் அரைசதமடித்தார். ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி வழக்கம்போல அதிரடியாக விளையாடினார். அவர் 43(16) ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் துருவ் ஜுரெல் ஜோடி சேர்ந்தார்.
இதில் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட ஜுரெல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் 54(38) ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஜுரெல் 16(20) ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து 51(27) விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து டோனோவன் பெரெய்ரா களமிறங்கினார்.
அப்போது கேப்டன் ரியான் பராக் 29(16) ஓட்டங்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இம்பேக்ட் பிளேயராக சுபம் துபே களமிறங்கினார்.
இந்த பெரெய்ரா - சுபம் துபே ஜோடி அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் இலக்கை நோக்கி வேகமாக சென்றது.

இறுதியில் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
பெரெய்ரா 52(26) ஓட்டகளுடனும், சுபம் துபே 31(12) ஓட்டங்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.