ஆர்சிபி அணிக்கு தொடரும் சோகம்..! சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது தோல்வி
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு(RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(PBKS) அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஐபிஎல் சீசனின் 34ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
மழை பெய்ததால் போட்டி தாமதாகி ஆரம்பிக்கப்பட்டு 6 ஓவர்கள் குறைக்கப்பட்டன.
பஞ்சாப் கிங்ஸ் அணி
நாணயசுழற்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய பெங்ளூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பெங்ளூரு அணி சார்பில் டிம் டேவிட் தனி ஆளாகப் போராடி 26 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் ரஜத் படிதர் 18 பந்தில் 23ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி சார்பில் யான்சேன், சஹல், அர்ஷ்தீப் சிங், பிரார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பெங்களூரு அணி
இதையடுத்து 96 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பிரியன்ஷ் ஆர்யன் 16 ஓட்டங்களும், பிரப் சிம்ரன் சிங் 13 ஓட்டங்களும், ஸ்ரேயஸ் ஐயர் 7 ஓட்டங்களும், ஜோஷ் இங்லீஷ் 14 ஓட்டங்களும் எடுத்தனர். நேஹல் வதேரா 19 பந்தில் 33 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இறுதியில், பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெறும் 5ஆவது வெற்றி இதுவாகும். பெங்களூரு அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.
சோகமான சாதனை
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி தங்களது சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
பெங்களூரு அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நான்கு வெற்றிகளுமே வெளியூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் கிடைத்த வெற்றியாகும்.
இந்த மூன்று தோல்விகளுமே சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள் ஆகும்.
இதன் மூலம் நடப்பு சீசனில் சொந்த மண்ணில் ஒரு வெற்றி கூட பெறாத அணி என்ற சோகமான சாதனையை பெங்களூரு அணி படைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
