விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு! ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் : மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் நெடுமாறன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருபதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
பொது வெளியில் வருவார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த கூற்றை, முன்னர் மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam