உண்டியல் போன்ற சட்டவிரோத முறை தேவையில்லை: வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கான செய்தி
இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால வழங்கியுள்ள தகவலின்படி, பேபால் (PayPal) ஊடாக இலங்கைக்குள் வெளிநாட்டுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இனிவரும் காலங்களில் இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஒன்லைன் சேவை வழங்குநர்கள் (Freelancers) முறையான வங்கி வழிகள் ஊடாக நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..
இதற்கு முன்னர், பேபால் வசதி இல்லாததால் இலங்கையர்கள் வெளிநாட்டு முகவரிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டுக் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
முறையான வங்கி முறை
இதனால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய அந்நியச் செலாவணி வெளிநாடுகளிலேயே தங்கியிருந்தது. முறையான வங்கி முறை ஊடாகப் பணம் வருவதால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவடையும்.

மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு அமைவாக இந்தச் செயற்பாடு அமைவதால், பணப் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படும். 'உண்டியல்' (Undiyal) போன்ற சட்டவிரோத மற்றும் முறைசாரா பணப்பரிமாற்ற முறைகளைக் குறைத்து, மக்களை முறையான வங்கிச் சேவையை நோக்கி நகர்த்த இந்தத் திட்டம் ஊக்கமளிக்கும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam