தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல் நிலவுகின்றது.
அந்தவகையில், இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி, திருவள்ளுவர் வித்தியாலயம், துவாரகா வித்தியாலயம், மூதூர் வலயத்தில் உள்ள கங்குவேலி அகத்தியர் வித்தியாலயம், இலிங்கபுரம் தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆதியம்மன் கேணி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு கணிதம், கணினி மற்றும் அறிவியல் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை.
மாவட்ட நலன்புரி சங்கம்
தமிழ் மாணவரது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகக் கல்வித் துறையின் வேண்டுகோளுக்கமைய திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் மேற்படி பாடசாலைகளுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி வருகின்றது.
குறித்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.கதிர்வேலு சண்முகம் குகதாசன், செயளாலர் திரு.கணபதிப்பிள்ளை சிவானந்தன்,பொருளாளர் திரு. இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இக்கொடுப்பனவுகளை வழங்கினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |