ஊரடங்குக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தபாலகங்கள் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு
ஊரடங்குக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் தபாலகங்கள் ஊடாக ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்த ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் அலுவலகங்கள் இன்று (01) திறக்கப்பட்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்தின் கீழுள்ள சகல தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களிலும் இன்று (01) ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டதுடன், நோயாளர்களுக்கான வைத்தியசாலை கிளினிக் மருந்துப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டதாகப் பிரதம தபால் அதிபர் எஸ்.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாவட்டத்தின் சகல தபால் அலுவலகங்களும் திறக்கப்பட்டு ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
ஓய்வூதியம் பெறுவோரும் ஏனையோரும் சுகாதார நடைமுறைகளைப் பேணி தபாலகம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
