யாழில் இலவச கற்கை நெறிக்கு பணம் அறவிட்ட பாடசாலைகள்: விசாரணையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் இலவச ஆங்கில கற்கை நெறிக்கு இரண்டு பிரபல பெண்கள் பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வட மாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் (29.01.2023) யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் புள்ளிகள் வெளியாகும் வரை அவர்களின் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வதற்காக வடக்கு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இலவச ஆங்கில கற்கை நெறி யாழில் உள்ள இரு பெண்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டுள்ளது.
நிறுவனமயப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் வைப்பு
ஆங்கில கல்வியை பூர்த்தி செய்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில், இரு பாடசாலைகளிலும் சுமார் 3,000 ரூபா வரை தலா ஒரு மாணவியிடம் அறவிடப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அறவிடப்பட்ட நிதி பாடசாலை நிறுவனமயப்படுத்தப்பட்ட வங்கி கணக்கு ஒன்றில் வைப்பிலிடப்பட்ட நிலையில், அந்த பணத்தை அப் பாடசாலை அதிபர் கையாண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஒரு பாடசாலையில் ஏற்கனவே கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அதே பாடசாலை மாணவர்களிடம் உயர்தரத்திற்காக நிதி அறவிடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
உரிய முறையில் விசாரணை
மீண்டும் அதே பாடசாலையில் இலவசமாக கற்பிக்கப்பட்ட ஆங்கில கற்கைநெறிக்கு பணம் அறவிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவியபோது,
அவர் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன்,இந்த சம்பவத்தை உரிய முறையில் விசாரணை செய்து, மாகாண கல்வித் திணைக்களம்
அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவித்தார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
