வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மக்களின் வசதிக்காக தபால் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த அல்ல : பசில் மற்றும் கோட்டாபயவின் குடியுரிமையை பறிக்கலாம் - கால்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க தயாராகும் எம்.பி
24 மணிநேரமும் இயங்கும் தபால் நிலையங்கள்
அத்துடன், பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனிவீதி, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொடை, சீதாவாக்கபுர ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் 24 மணிநேரமும் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை இந்த தபால் நிலையங்களில் எவ்வித அசௌகரியமும் இன்றி 24 மணிநேரமும் செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
