இலங்கைக்கு வந்துள்ள வத்திக்கான் செயலாளர் வைத்தியசாலையில்!முக்கிய திட்டம் இரத்து
வத்திக்கானின் அரச உறவுகளுக்கான செயலாளர் போல் ரிச்சட் கல்லாகர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடங்களைப் பார்வையிட இருந்த நிலையில் அந்த திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வருகைத் தந்த போல் ரிச்சட் கல்லாகர் தமது பயணத்தின் இடையில் சுகயீனமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 3ஆம் திகதியன்று அவர் இலங்கை வந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்ட தலைவர்களை சந்தித்தார்.
திட்டம் இரத்து
எனினும் ஏனைய சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் சுகயீனமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

போல் ரிச்சட் கல்லாகர், தமது பயணத்தின்போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின்போது பாதிக்கப்பட்ட தேவாலயங்களையும் பார்வையிடத் திட்டமிட்டிருந்ததுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயகர்களையும் அவர் சந்திக்கவிருந்தார்.
இதனையடுத்து, அவரது நிலைமை கருதி குறித்த திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam