கர்தினல் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையின் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்திானல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்த கொள்கைகளில் மாணவர்களுக்கான பாலியல் கல்வி தொடர்பில் பிழையான அணுகுமுறைகள் பின்பற்றக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாடசாலை பாட விதானத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது தொடர்பில் அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

பொருத்தமற்ற உள்ளடக்கங்களை சேர்ப்பதன் மூலம் மாணவர்கள் பிழையாக வழிநடத்தப்பட கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ள கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக இந்த பாலியல் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கும் பாலியல் கல்வி தொடர்பான கற்கை நெறி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக வகுப்பு ஆசிரியர்களை ஆயத்தப்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பில் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது கல்வியா இது என்ன? இந்த பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது தேவையான விடயங்களை பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும், அது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகள் வயது வரும்போது சில விடயங்களை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோருடையது. பெற்றோரே இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓரின சேர்க்கை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குடும்ப கட்டுப்பாடு தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாக கேள்விப்பட்டதாகவும், இந்த அனைத்து நடவடிக்கைகளின் பின்னணியிலும் நாட்டை அழிக்கும் சர்வதேச அமைப்புக்கள் இருக்கின்றன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடும்ப நிர்வாக அமைப்பு பின்னணியில் நின்று செயல்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
அரசாங்கத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் பணம் கொடுத்து தேவையான புத்தகங்களை அச்சிட்டு பிள்ளைகளை பிழையாக வழிநடத்த முயற்சிக்கப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் இந்த புதிய பாடங்கள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தரம் ஆறிலிருந்து இந்த கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது எங்களது பிள்ளைகளை அழிக்க முயற்சிக்கும் நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மே மேற்கத்தைய நாடுகளில் மதம், தர்ம கொள்கைகள் இல்லாத பகுதிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் இலங்கையில் பின்பற்றப்பட உள்ளது, எனவும் தேவையற்ற விடயங்களை எமது பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.
பிள்ளைகளை பிழையாக வழிநடத்த கல்வி அமைச்சு முயற்சித்தால் அதற்கு இடம் அளிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் பற்றி ஜனாதிபதிக்கு தெரியுமா என்பது தமக்கு தெரியவில்லை எனவும் அதிகாரிகளுக்குத் தேவையான வகையில் செயற்பட அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோருவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan