பட்டிருப்பு தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றுள்ளது.
குறித்த விளையாட்டுப் போட்டியானது, வித்தியாலய அதிபர் பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டுள்ளார்.
சான்றிதழ்கள் வழங்கிவைப்பு
தமிழர் கலை கலாசார முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வை உத்தியோகபூர்வமாக இராஜாங்க அமைச்சர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்துடன், வெற்றியீட்டிய இல்லங்களுக்கும் மாணவர்களுக்கும் பதக்கங்கள், வெற்றிக்கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |