அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர்
உப்பு வியாபாரம் கூட செய்ய முடியாதவர்களுக்கு எவ்வாறு கல்வி சீர்திருத்தம் செய்ய முடியும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க கேள்வி கனையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர், "பாரிய திட்டங்களுக்கு செல்ல வேண்டாம். உங்களின் சிறிய மூளைக்கு ஏற்ற செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
கல்வியை அரசியலாக்கிய..
பிரதமர் கூறுவது போல் நாம் கல்வியை அரசியல் ஆக்கவில்லை. உங்களுடன் இருக்கும் ஜே.வி.பியே 1965 ஆம் ஆண்டு கல்வியை அரசியல் ஆக்கியது.
பல்லைக்கழகங்களை தமது அரசியல் செயற்பாட்டில் தலைமை நிலையங்களாக மாற்றி பல்லைக்கழகங்களை மூடுவதற்கும் வழிசமைத்தவர்கள்.
அது மட்டுல்ல தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களை அமைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடி வதை செய்தவர்கள்.
இன்றும் அவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்றார். அதனால் எமக்கு கையை நீட்டு முன் நீங்கள் கண்ணாடி முன் நின்று பாரத்துக் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



