மாபியா கும்பலுக்கு சாதகமாகியுள்ள இலத்திரனியல் அடையாள அட்டை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலத்திரனியல் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வழங்கப்படும் தரவுகளால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்கள் உருவாகும் என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கையில் உள்ள பிரபலங்களிடம் மாபியா கும்பல்களால் கப்பம் கோரும் நிலை உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இதன்படி, தற்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இலத்திரனியல் அடையாள அட்டை Biometrics தரவுகளை கொண்டதாகும் எனவும் கூறியுள்ளார்.
கசிவதற்கான வாய்ப்பு
இந்த தரவுகள் வெளியில் கசிவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை செய்யும் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு தரவுகள் கசிந்ததில் இந்திய பிரபலங்களிடம் கப்பம் கோரப்பட்டது.
மேலும், இந்தியாவுக்கு எமது தரவுகளுக்கு உள்நுழையும் வாய்ப்பு அதிகமாகும். இவை தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாகும் எனவும் கூறியுள்ளார்.





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
