பிள்ளை இறந்து போகுமென அருள்வாக்கு! அப்படியே பலித்த அதிசயம் - காட்டு மாரியம்மன் ஆலய அற்புதம்
இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் காணப்பட்டாலும் கொட்டகலை பத்தனை ஊரிலுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலயம், நம்பி வருபவர்களின் குறைத் தீர்க்கும் ஆலயம் என்று அந்த ஊர் மக்களால் நம்பப்படுகின்றது.
சுமார் 150 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் பத்தனை சந்தியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சியை முகம் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இன, மத வேறுபாடின்றி மக்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கும் போது ஆலயத்தின் பூசகர் எம்முடன் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், குறித்த பூசகரின் அம்மன் ஒளியாக தோன்றி தான் இந்த இடத்தில் இருப்பதை அறிவித்ததாகவும், இதன்படி அப்பகுதியில் தோண்டிப் பார்த்த போது அங்கு சிலைகள் காணப்பட்டதாகவும் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன் பூசகரின் தாத்தாவிற்கு அருள்வாக்கு கூறும் போது அவருக்கு 22 வயதில் திருணம் நடக்கும் எனவும், ஒரு பிள்ளை இறந்து போவதாகவும் கூறிய நிலையில் அப்படியே அந்த விடயம் நடந்ததாகவும் அவர் எமக்கு குறிப்பிட்டார்.
இவ்வாறான பல அதிசயங்கள் நிறைந்த பத்தனை காட்டு மாரியம்மன் ஆலயம் தொடர்பான விரிவான தொகுப்பு காணொளியில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
