இலங்கையில் பிரதேச சபை ஒன்றின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!
எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிளான ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொதுச் சேவைகளைப் பேணுவதிலும் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் ஏற்பட்ட தோல்விகளைக் கருத்திற் கொண்டு இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த சபை நிர்வாகத்தால்,பொதுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 718 மில்லியன் ரூபா நிதி சரிவரப் பயன்படுத்தப்படவில்லை.
இடைநிறுத்தம்
40 மில்லியன் ரூபா செலவில் குடிநீர்க் குழாய்கள் கொள்முதல் செய்யப்பட்டும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொதுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 18.5 மில்லியன் ரூபா நிதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதேச சபையின் நிர்வாகப் பொறுப்புகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.டபிள்யூ.ஜி.எல். அத்தநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சபையின் முன்னாள் தவிசாளர் கே. எஸ். பி. ராஜநாயக்க தற்போது நீதிமன்ற வழக்கொன்றின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.