தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மோடு எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை (VIDEO)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் என பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்த பிரதேசமாக இருக்கின்றது.
10 ஆண்டுகளிற்கு பின்னரும் இவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது.
கோவிட் நிலை காரணமாக மிகவும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டி உள்ளது.
இனம், மதம், சமயம் என்ற பிரச்சினைகளிற்கு அப்பால், அனைத்து இலங்கை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக சொல்லபோனால் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.
இந்த நேரத்தில் அனைத்து மக்களும் ஒன்றாக வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை.
பிரதேசவாதங்களை களைந்து அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்றோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
