சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ, அவரது மனைவி, குளோரியஸ் தேவாலயம் மற்றும் அவரது நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ஒன்பது வங்கி கணக்குகளின் விபரங்களை ஆய்வு செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதவெறுப்பு கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் ஒரு பகுதியாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு,கோட்டை நீதவான் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதகர் ஜெரோமின் உள்ளூர் வங்கிக் கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் புழக்கத்தில் உள்ளதாக இதுவரை விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
2023, மே 18, அன்று, ஜெரோம் பெர்னாண்டோ, கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது, பிற மதங்களை குறிப்பாக பௌத்தம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |