சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோமின் மனைவி மற்றும் குழந்தைகள் மீண்டும் இலங்கைக்கு
மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைக்குள் சிக்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவியும் அவரது பிள்ளைகளும் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
நேற்றையதினம் அவர் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மதங்கள் தொடர்பில் அவமதிக்கும் கருத்தை வெளிப்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டு பல சர்ச்சைகளில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கோரிய ஜெரோம்
அத்துடன் அவரது கருத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படக் கூடிய நிலை காணப்படுகின்றது.
எனினும், அவர் இதுவரையில் நாடு திரும்பாததுடன், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் கடந்த 26.05.2023 அன்ற அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், தமது கருத்தினால் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் இரண்டு முறை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
