சர்ச்சைக்குரிய தனது கருத்துக்கு மீண்டும் மன்னிப்பு கோரிய போதகர் ஜெரோம்
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த, இந்து, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏனைய மதங்கள் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கரத்த நாட்டில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையல், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் அவருக்கு எதிராக பயணத்தடையும் விதிக்க நிதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
அடிப்படை மனு தாக்கல்

இவ்வாறான நிலையில், கடந்த 21ஆம் திகதி தனது கருத்தினால் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கு மன்னிப்பு கோருவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், தம்மை கைத செய்வதை தடுக்கக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் நேற்றையதினம்(26.05.2023) அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தனது கருத்து தொடர்பில் மீண்டும் இன்றையதினம் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan