இலங்கையை வந்தடைந்தார் சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ
பிற மதங்களை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை வந்தடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர் இன்று அதிகாலை (29.11.2023) தோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலனாய்வுத்திணைக்களத்தினர் விசாரணை
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், அவர் 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பயணத் தடையைப் பெற்றிருந்தனர்.
எனினும் அதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
