24 மணித்தியாலத்தில் 11 சிறுமியருக்கு நேர்ந்த கதி!
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட 11 சிறுமியர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 50 வயதான விவசாயி என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
இந்த விவசாயி, கபுகொல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 3 சிறுமியரை ஓராண்டு காலமாக பாரதூரமான முறையில் தகாத செயற்பாடுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய விவசாயி குறித்த சிறுமியரின் குடும்ப உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்புறுபிட்டி, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹுங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் சிறுவர்கள் தொடர்பான இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
