வரலாற்றில் அதிகூடிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள வருடம்! இலக்கை விட அதிக வருமானம்
கடந்த 2022ஆம் ஆண்டில் ஒன்பது இலட்சத்திற்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் மொத்தமாக 911,689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது வரலாற்றில் இதுவரை, ஒரு வருடத்தில் வழங்கப்பட்ட அதிகூடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலக்கை விட அதிக வருமானம்

மேலும், அதிகூடிய கடவுச்சீட்டு விநியோகத்தின் மூலம் 2022ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் இலக்கை விட, தேசிய வருமானத்துக்கு 23.8 பில்லியன் ரூபாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பெற்றுக் கொடுத்துள்ளது.
இது கடந்த ஆண்டு வருமானம் மற்றும் கருத்தில் கொள்ளும்போது 174.8% அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri